லண்டன் மியூசியத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ‘புலி நகம் ‘ஆயுதம் இந்தியாவுக்கு வருகை .

லண்டன் மியூசியத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ‘புலி நகம் ‘ஆயுதம் இந்தியாவுக்கு வருகை .

லண்டன் அருங்காட்சியிலிருந்து மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் ‘புலி நகம்’ என்ற ஆயுதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. 17 -ம் நூற்றாண்டின் 1659 ஆம் ஆண்டுகளில் மாமன்னராக வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி . இவர் மராட்டிய வம்சத்தில் மிகுந்த துணிச்சலையும் வீரபோர் புரியும் திறனையும்,தன்னம்பிக்கையும் கொண்டவர். தற்போது மாமன்னர் சத்ரபதி சிவாஜி ‘வாக்நாக்’ ‘புலியின் நகம்’ போன்ற ஆயுதங்கள் இங்கிலாந்து விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியத்தில்சத்ரபதி சிவாஜியின் ஆயுதங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ‘வாக்நாக்’ ‘புலி நகம்’ போன்ற ஆயுதங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மந்திரி சுதிர் முங்கதிவார் நாளை இங்கிலாந்துக்கு செல்கிறார்.இது கையெழுத்திட்ட பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு மும்பையில் உள்ள அருங்காட்சியத்தில் கண்காட்சியாக வைக்கப்படயிருக்கிறது. சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜியின் புலி நகம் போன்ற ஆயுதங்கள் இந்தியாவின் பெருமையரியதாகும்.

Related post