உலகளவில் வெறிநாய்கடி ரேபிஸ் நோய்க்கு 85 ,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெருக்களில் வெறிநாய் கடி அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் தெரு நாய்கள் கடியால் நோய் தாக்கத்தோடு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. . இந்தியாவில் வெறிநாய்க்கடியில் உத்திரபிரதேச முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் பதிவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 72,77,523 வெறி நாய் கடி வழக்குகள் இருந்தது, 2020இல் 46, 33,493 பதிவாகி வழக்குகள் என்று பதிவாகி இருந்தது. 2022 மீண்டும் 14.5 லட்சத்துக்கு அதிகமாகவே வெறி நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதை தடுப்பதற்காக தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதும் முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் உலக சுகாதார அமைப்பு சார்பாக வல்லுநர்கள் தெரு நாய் கடியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.