ராமநவமியை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளின் தேதி மாற்றம்!

ராமநவமியை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளின் தேதி மாற்றம்!

 17ஆவது சீசனான 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடான் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் கொல்கத்தா நைட்ரைட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி நடைபெற இருந்தது.

வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா கொல்கத்தாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைட்ஸ் – ராஜஸ்தான் ராயர்ஸ் இடையேயான போட்டிக்கான தேதி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஒரு நாள் முன்னதாகவே ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related post