ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பளம் 4% உயர்வு என்றுஅதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய ‌அரசின் பல்வேறு துறைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் ரயில்வே துறையின் தலைமை அதிகாரிகள், மேலாளர் , கண்காணிப்பாளர் தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள்,11.07 லட்சம் ஊழியர்களுக்குத்தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இதற்காக ரூபாய் 1, 968 .87 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் , மத்திய அரசு மேலும் ரயில்வே ஊழியர்களின் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு ,நிலக்கரி, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ரயில்வே ஊழியர்கள் பணியாற்றியதற்காகவும் 2022-23 ஆண்டுகளில் ரயில்வே ஊழியர்களின் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் பாராட்டி மத்திய அரசு இந்தத் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
டாஸ்மார்க் ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் வழங்க அமைச்சர் முத்துசாமி ஆலோசனை!

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சர் முத்துசாமி ஆலோசனை!

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கையானது தமிழக அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர் முத்துசாமி அவர்களின் தலைமையில் 21 தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை…
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்-  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டுள்ளது .இதே…