ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தின் உற்சாகம்!

ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தின் உற்சாகம்!

ரமலான் இஸ்லாமிய நாள்காட்டியின் 9ஆவது மாதம் கொண்டாடப்படும் பண்டிகை . இப் பண்டிகை பிரார்த்தனை, நோன்பு, பிரதிபலிப்பு, ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஈகைத் திருநாளாகும். இந்தாண்டு பிறை தோன்றியதன் அடிப்படையில் சில நாடுகளில் கொண்டாடப்படுகிறது.பிறை தெரிந்ததும் முதல் நோன்பினை துவங்கி, மீண்டும் பிறை தெரிவதன் அடிப்படையில் ரமலான் மாதம் கணக்கிடப்படுகிறது. சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் நோன்பினை, இஃப்தார் விருந்துடன் நிறைவு செய்கிறார்கள். ஒரு மாத காலம் பகல் பொழுதில் உணவு, தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல், இறை வழிபாட்டில் மட்டுமே மனத்தை செலுத்தி, மிக கடுமையாக ரமலான் நோன்பினை கடைபிடிக்கிறார்கள்

ரமலான் மாதம் மார்ச் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைகிறது.  ஏப்ரல் 22ஆம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, ரம்ஜான் பண்டிகை பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே கொண்டாடப்படுவதால், எப்போதும் தேதி மாறுபடும். கத்தார், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகளில் ஏப்ரல் 20ஆம் தேதியே பிறை தெரிந்து கொண்டாட்டங்களும் ஆரம்பித்துவிட்டன.  இந்தியாவில் ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று பிறை தெரிந்து, ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Related post