ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஸ்கூலில் நடைபெறும் காட்சிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.
மாணவர்களிடம் எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் செல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், நடித்துள்ளார்.பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களைப் பற்றி ஆராயும் விதமான திரைப்படமாக இக்கதை உருவாகி வருகிறது. இந் நிலையில் ஸ்கூல் திரைப்படம் விரைவாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.