யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின் ட்ரெய்லர்கள் வெளியீடு!

யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின்  ட்ரெய்லர்கள் வெளியீடு!

 யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின்  ட்ரெய்லர்கள் வெளியீடு!  நகைச்சுவை நடிகர் யோகி பாபு தூக்குதுரை திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார்.  தூக்குதுரை திரைப்படம் டென்னிஸ் மஞ்சுநாத்   இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின்  கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன்,  மகேஷ், பால சரவணன் போன்ற நடிகர்கள் பட்டாளங்கள்  இணைந்துள்ளனர்.  இந்த படத்தினை கே.எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார். ரவி வர்மா ஒளி பதிவினை மேற்கொண்டுள்ளார். தீபக் எஸ். துவாரநாத் படத்தொகுப்பினை வழங்கியுள்ளார்.

ஜெய் முருகன், பாக்கியராஜ் கலை இயக்கம் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தில்   மான்ஸ்டர் முகேஷ் ,ராம்குமார் சண்டை பயிற்சிகளை அளித்துள்ளனர். தூக்குதுரை படத்தை ஓபன் டேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை 19ஆம் நூற்றாண்டு 1999, 2022 வருடங்களில் மூன்று காலகட்டங்களில்  நடப்பதை போன்று காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.  தூக்குதுரை திரைப்படத்தின் டீசரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். நகைச்சுவை படமான ‘தூக்குதுரை’டீசர்கள் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Related post