மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி!

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில்  நிலையங்கள் தொடங்கப்பட்டது. கட்டண சலுகை, பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை, மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்தது.   இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே மெட்ரோ ரயில்   நிலையங்களில் வாகனங்களை நிறுத்துபவருக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை (ஜூன் 14) புதன்கிழமை இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை  பயன்படுத்தி வாகனங்களை நிறுத்தலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின்  வாகனங்களை நிறுத்திவிட்டு அதே நாளில் எடுக்கும் போது கட்டண தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த கட்டண தள்ளுபடி (https,//Chennai metro rail, org/Parking-tariff/)   இணையதளம் மூலமாகவும், மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த பணியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த வாகன நிறுத்த கட்டண சலுகை இன்று முதல் அமலபடுத்தப்படுகிறது.

Related post

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர் சி ரத்து!

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர் சி…

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது .இந் நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம்2019…