ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்கள் உட்பட எண்ணில் அடங்காத சாதனைகளை படைத்துள்ளதார். இவரின் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை மகாராஷ்டிரா முதலமைச்சர் எக்நாத் ஷிண்டே திறந்து வைத்தார். இந்தச் சிலை 22 அடி உயரம் கொண்டு
மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே வடிவமைத்துள்ளார். இந்தச்சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர், டெண்டுல்கர் அவரின் குடும்பத்தார் ,பி சி சி ஐ செயலாளர் ஜெய்ஷா ,துணை செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.