முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்-மாணவர்களுக்கான அறிவுரையை வழங்கினார்!

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்-மாணவர்களுக்கான அறிவுரையை வழங்கினார்!

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இந்த எஸ் ஆர் ஆர் பொறியியல் கல்லூரியில் 18 ஆவது பட்டமளிப்பு விழாவாக நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டார். இவ்விழாவில் 862 பேருக்கு இளநிலைபட்டங்களும் ,74 பேருக்கும் முதுநிலை பட்டங்களும் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் ” அறிவியல் துறையில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட வேண்டும்.மேலும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலானவர் தனது ப்ராஜெக்ட்களைப் பணத்திற்காக விற்று விடுகின்றனர்,

இதனால் தங்களது எதிர்காலத்தை அழித்துக் கொள்கிறார்கள் .எனவே தனது புதிய ப்ராஜெக்ட் கொண்டு வாழ்க்கையில் அப்துல் கலாம் போன்று உருவாக வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள திருப்தி தரும் வேலையில் ஈடுபடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

Related post