முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிக மூடல்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிக மூடல்

நீலகிரி மாவட்டம் கடலூரை அடுத்த உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அபயாரண்யம் பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் கும்கி யானைகள், வளர்ப்பு யானைகள், சவாரிக்கு பயன்படுத்தும் யானைகள், குட்டி யானைகள் என 28 வகையானயானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தெப்பக்காடு முகாமில் பழங்குடி தம்பதியினர் பொம்மன், பெல்லி நல்ல பராமரிப்புடன் யானைகளை வளர்த்து வருகின்றனர்.

மேலும் தற்போது யானைகளுக்கும் இவர்களுக்கும் உண்டான உறவை கொண்டு ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ போன்ற ஆவண படங்கள் வைரலாகி ஆஸ்கர் விருது பெற்றிருந்தனர். தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமிற்கு வருவதாக உள்ளார்.எனவே தெப்பக்காடு யானை முகாம் பராமரிப்பு பணியிற்காக (ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி) வரை தெப்பக்காடு யானை முகாம் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post