மீனவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண நிதி. தமிழ்நாட்டில் மீன்பிடிப்பு தடைக்காலம் காரணமாக மீனவர்களுக்கு ரூபாய் 5000 நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. மே 26 முதல் நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன் பிடிப்பு தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை இந்த மீன் பிடிப்பு தடைக்காலமாக 61 நாட்கள் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
எனவே மீன்பிடிப்பு தடைக்காலம் நிவாரணத்துக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 89 . 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 1.79 லட்ச மீனவ குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள். தமிழகஅரசால் மீனவ குடும்பத்திற்கு தலா ரூபாய் 5000 வீதம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மே 26 முதல் வரவு வைக்கபடுகிறது. மீனவ குடும்பங்களின் நலனுக்காக தமிழக அரசு நிவாரணநிதி தொகையை வழங்கி வருகிறது.