மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு!

மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு!

மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை. மின்வாரிய ஊழியருக்கு 6% சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது என மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியருக்கு சம்பள உயர்வு வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும் மின்வாரிய ஊழியருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 19 தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதில் அறிக்கை வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கையில் ‘ஏற்கனவே 10 ஆண்டுகளாக பணியாற்றும் மின்வார ஊழியருக்கு 2019 ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி படி 3% சம்பள உயர்வு வழங்கப்படும்.

மேலும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி வருகிற 10 ஆண்டுகளில் 6% சம்பள உயர்வு மின்வாரிய ஊழியருக்கு இரண்டு தவணையாக வழங்கப்படும்’ எனவும் இதன் மூலம் மின் வாரிய  பணியாளர்கள்  மற்றும் அலுவலர்கள் பயன்பெறுவர். இதனால் தமிழக அரசுக்கு ரூ527 கோடி  கூடுதலாக  செலவிடப்படும்  என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.இந்த அறிக்கையானது 19 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.  இதில் மின்  பகிர்மான கழகத்தின் ராஜேஷ் லக்கானி மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன் போன்றோர் கலந்து கொண்டனர்.

Related post

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அனல் மின் நிலையங்களில் செயல் திறன் மேம்படுத்துதல், தேரோடும் வீதிகளில்…