தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், அரசு பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட, ஐந்து கோரிக்கைளை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளின் உரிமை சட்டம் 2016 இன் படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது .பார்வை குறைபாடு, காது கேளாமை, முடக்குவாதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 1 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்படும் என்றும் அவர்களின் தேவை, வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு போராட்டத்தைக்கைவிடும் வேண்டுகோள் விடுத்துள்ளது.