மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மாதவன் சினிமாத்துறையில் நடித்துக் கொண்டிருந்தாலும் நீச்சல் போட்டியில் பங்குபெறும் தனது மகனை ஊக்கப்படுத்தும் வகையில் நேரத்தை செலவழித்துக் கொண்டு வருகிறார். தனது மகன் வேதாந்த் 58 ஆவது மலேசியா இன்டர்நேஷனல் ஏஜ் பிரிவு சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை இந்தியாவிற்காகப் பெற்றுள்ளார் என்ற பெருமையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி உள்ளார். வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 1,500 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 16 நிமிடங்களில் 780 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த அத்வைத்தின் சாதனையை வேதாந்த் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய கொடியுடன் பதக்கங்களுடன் வேதாந்த்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட மாதவன் நல்ல வேகத்துடன் திறமையாக முன்னோக்கி நீந்திய வேதாந்த் “கடவுளின் ஆசீர்வாதத்தால் மலேசியா இன்டர்நேஷனல் ஏஜ் பிரிவு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக (50 மீட்டர் 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்) ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.” என மகிழ்ச்சியுடன் உங்களின் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.