மறைந்த மேல்மருவத்தூர் பங்காள அடிகளார் அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு முதல்வர் அறிவிப்பு!

மறைந்த மேல்மருவத்தூர் பங்காள அடிகளார் அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு முதல்வர் அறிவிப்பு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தின் ஆன்மீக குரு பங்காள அடிகளார் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் வயது (82 ). அனைத்து தரப்பினர்களுக்கும் கல்வி கற்க வேண்டும் என்ற தரப்பில் பல மருத்துவ கல்லூரிகளையும் பொறியல் கல்லூரிகளையும் நிறுவியவர். மேலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் அர்ச்சகராக பூஜைகள் செய்யலாம் என்பதை நிறைவேற்றிக் காட்டியவர் . செங்கல்பட்டில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர் ,.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ,ஆளுநர் ரவி போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .பல முக்கிய பிரபலங்களும் , இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் கண்ணிருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தில் ஆன்மீக குரு பங்காள அடிகளார் அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Related post