‘ மன்னுயிர் காப்போம் திட்டம்’ அறிமுகம் – வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

‘ மன்னுயிர் காப்போம் திட்டம்’ அறிமுகம் – வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்களில் மன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்படும் , 2024- 25 ஆம் ஆண்டிற்கான ‘மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளுக்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,தெரிவித்துள்ளார். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பவர்களுக்காக முதலீட்டு கடன்களுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தேனீ முனையம் ரூ 3.60 கோடியில் செலவில் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார் .

இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் முல்லை பூங்கா ரூபாய் 2 கோடி செலவில் அமைக்கப்படும், 41.35 கோடி செலவில் முக்கனி மேம்பாட்டு சிறப்பு திட்டங்கள் தொடங்கப்படும் என்றார் .14,000 பண்ணைய தொகுப்புகள் அரசு திட்டங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும் விவசாயிகளுக்கிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத்தெரிவித்தார் .

Related post

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர்…

தமிழக சட்டப்பேரவையில் (பிப்ரவரி 20 )இன்று வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தொடரை தாக்கல் செய்தார். வேளாண் துறையில் தமிழக அரசு…