மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை பகுதிகளில் (9 .7.2023) அன்று ( IND -TN -10 – MM-627 ) மற்றும் (IND -TN -10-MM-913 ) என்ற படகுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.  அப்போது அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களும் இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழக மீனவர் குடும்பங்களிடையே மன உளைச்சலும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.  இதற்கான தீர்வை காண்பதற்காக தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசானது மீனவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதற்காக  பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக தீர்வு காண்பதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்து  தமிழக முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
நமக்கு  நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

‘நமக்கு நாமே’ திட்டம் ஊரகப் பகுதிகளில்  செயல்படுத்தப்படுகிறது. நமக்கு நாமே திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய்.100 கோடியை  விடுவித்துள்ளார் . இதற்கான அரசாணை தமிழக அரசு இன்று…