மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இவ் விழாவானது மே (13ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு மே 22 ஆம் தேதி வரை) 10 நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த வைகாசி மாத வசந்த விழாவின் முதல் நாளான நேற்றைய தினம் திங்கட்கிழமை புதுமண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து வீணை இசை கலைஞர்களும் கலந்து கொண்டு அம்மனை வரவேற்கும் விதமாக வாசிக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக பக்தர்கள் ஏராளமாக வந்திருந்தனர்.