மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர், மாணிக்கவாசகர், அர்த்தநாரீசுவரர், கருப்பண்ணசாமி, கத்தரிக்காய் சித்தர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் வழித்தலமாக இக்கோயில் உள்ளது .
அம்மை ,கொப்புளம், மக்கி போன்ற நோய்களை நீக்க சிறுமி வடிவில் அம்மன் அங்கு வந்தாள் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் உப்பு ,மிளகு வாங்கி போட்டால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் கடந்த மார்ச் மாதம் தேர்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது கோடை காலம் என்பதால் வெயிலுக்கு உகந்த அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது..

Related post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சித்திரை விழாவானது ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 23ஆம்…
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ,அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த வருடம் ( 2024) 15ஆம் தேதி…