மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர், மாணிக்கவாசகர், அர்த்தநாரீசுவரர், கருப்பண்ணசாமி, கத்தரிக்காய் சித்தர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் வழித்தலமாக இக்கோயில் உள்ளது .
அம்மை ,கொப்புளம், மக்கி போன்ற நோய்களை நீக்க சிறுமி வடிவில் அம்மன் அங்கு வந்தாள் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் உப்பு ,மிளகு வாங்கி போட்டால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் கடந்த மார்ச் மாதம் தேர்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது கோடை காலம் என்பதால் வெயிலுக்கு உகந்த அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது..