மதுரை திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் தொடக்கம்!

மதுரை  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா  கொடியேற்றம்  தொடக்கம்!

அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றத்தில் சுவாமி சுப்பிரமணியர் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டது. காலை ஒன்பது முப்பது மணி அளவில் பக்தர்கள் அரோகரா அரோகரா என்று பரவசம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இக்கோயிலின் தெப்பத் திருவிழா இன்று ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 20ஆம் தேதி தை கார்த்திகை தினத்தை முன்னிட்டு தெப்ப மூட்டு தள்ளுதல், ரத வீதிகளில் சிறிய வைரத்தை வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு காலை ,மாலை ஆகிய இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளிப்பார்.

 

Related post