மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில்  டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  அந்த வகையில், மதுரை மாநகராட்சி 72 உட்பட்ட பகுதி  மாநகர அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணி ஆய்வுகள் நடத்தப்பட்டன.  இதைத் தொடர்ந்து மதுரை  மாவட்டம் முழுவதும் மாநகர சார்பில் 530 டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு    டெங்கு கொசுக்கள் ஒழிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் தேவையற்ற பழைய பொருட்கள் சுகாதாரமற்ற முறையில்  தேக்கி வைத்திருந்த காரணத்தாலும், டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்பட்ட காரணத்தாலும் மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று சுகாதாரமற்ற முறையில் இருக்கும் இடங்களுக்கும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக்கும் புழுக்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related post

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024…
தமிழகத்தில்  மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…