மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில்!

மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில்!

மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் அடுத்த கீழங்கரையில் 77. 683 சதுர பரப்பளவில் ரூபாய் 44.6 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. வாடிவாசல் , நிர்வாக அலுவலர்கள், காளை பதிவு செய்யும் மையங்கள், காளை பரிசோதனை மையங்கள், மாடுபிடி வீரர்கள் உடற்பயிற்சி கூடங்கள், உடைமாற்றும் அறைகள் , அரங்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை 75% நிறைவடைந்து விட்டதாகவும்., வரும் டிசம்பர் 15ஆம் தேதி கட்டி முடிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மைதானத்தைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே மதுரையில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post