மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024 இல் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர்( 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை) 11 நாட்களும் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தக கண்காட்சியுடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள் போட்டிகள் நடைபெற உள்ளன.இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவருக்கும் சுவையான சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்திருக்கிறார்.