மதுரையில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்!

மதுரையில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்!

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஐந்தாம் தேதி கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகர் ஆற்றில்  இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது.  இன்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 5:50 மணி முதல் 6:20 மணி வரை வைகை ஆற்றில் இறங்கினார்.

தினமும் காலை,மாலை சுவாமி வீதி உலா வருகிறார். மே இரண்டாம் தேதி திருக்கல்யாணம், மூன்றாம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டமும், மே நான்காம் தேதி சித்திரை கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாளில் கள்ளழகர் அலங்காரத்துடன் மதுரையை வலம் வருகிறார் மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.வண்ண வண்ண மலர் மாலைகளை பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்தனர்.சித்ரா பெளர்ணமி தினத்தில் கள்ளழகர் தனது சகோதரி மீனாட்சி அம்மனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார். இன்று அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணி வரை கோலாகலமாக நடைபெற்ற கள்ளழகரின்அழகைக் காண கோடிக்கணக்கான பக்தர் கூட்டம் கூடியது.

Related post

மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை…

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர்,…
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம்12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 23 இன்று அதிகாலை 5:51 மணி…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன்…