போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் தலைமையில் போதை பொருள் தடுப்பு ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை செயலாளார் அமுதா காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் போன்ற தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் போதை பொருள் தடுப்பு குறித்து நடவடிக்கைகளைக் கேட்டு அறிந்தார் . 

தமிழகத்தில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போதை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படுகின்றன எனக் காவல்துறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்தனர். எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இரும்புக்கரம் கொண்டு போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் எனக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

Related post

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் 2024 வருகிற ஆண்டில் நடைபெற உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் நாடாளுமன்ற தேர்தல்…
அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை. புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) வியாழக்கிழமை தொடங்குகிறது. இதன் காரணமாக மத்திய அரசு இன்று புதன்கிழமை…