பொறியியல் தரவரிசையில் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்!

பொறியியல் தரவரிசையில் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்!

பொறியியல் தரவரிசையில் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.   பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைகளான தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக், பி. ஆர்க்  பட்டப் படிப்புகளில்  மாணவர் சேர்க்கை மே 5  தேதி முதல் ஜூன் 9 தேதி வரை  விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் மொத்தம் 2. 29 லட்சத்துக்கு மேல்  விண்ணப்பிக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கு 78  பேருக்கு  பொறியியல் பட்டப்படிப்புக்கான சேர்க்கை  தரவரிசை பட்டியலில் இன்று வெளியிடப்பட்டது .

இந்த தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 200 / 200 கட் ஆப் பெற்ற முதல் பெண் நேத்ரா திருச்செந்தூரைச் சேர்ந்தவர், இரண்டாவது இடத்தில் ஹரினிகா தர்மபுரியைச்  சேர்ந்தவர்,மூன்றாவது இடத்தில் ரோஷினி பானு திருச்சியைச் சேர்ந்தவர்,  என்று பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.   பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை www.tneaonline.org இணையதளத்தில் அறியலாம். இந்தப் பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2 தேதிமுதல் தொடங்கப்படுகிறது.

Related post