பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

புதுச்சேரியில் கடற்கரை மற்றும் தாவரவியல் பூங்கா சுற்றுலா தலங்களில் வட மாநிலங்கள் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்திருந்தனர். இந்த நிலையில் பலவித கலர்களில் பாலித்தீன் பாக்கெட்களில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் (ரோடோமென் பி) என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக தகவல்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குச் சென்றடைந்துள்ளன. இதன் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலாத்தலங்களில் விற்பனைக்காகயிருந்த பஞ்சுமிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதன் மூலம் ஆயிரம் பஞ்சுமிட்டாய் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பஞ்சுமிட்டாயில் கலக்கப்படும் (ரேடோமென் பி) ரசாயனம் தொழிற்சாலைகளில் ஊதுவத்தி தீப்பெட்டிகளில் பயன்படுத்தும் ரசாயனமாக உள்ளது.

இந்த ரசாயனம் புற்று நோயை உண்டாக்கும்அபாயகரமானது. இதனை சாப்பிடுவதால் அனைத்து குழந்தைகளும் பாதிப்படைகின்றனர் என்று அதிகாரிகள் செய்தியாளர்களின் தெரிவித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உணவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related post