பொதுமக்களுக்கு தடுப்பூசி மருந்துகளை 11 மணிக்குள் போட வேண்டும் -பொது சுகாதாரத் துறை அறிவிப்பு!

பொதுமக்களுக்கு தடுப்பூசி மருந்துகளை 11 மணிக்குள் போட வேண்டும் -பொது சுகாதாரத் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்குப் பொது சுகாதாரத்துறை அறிவுரையை வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தேவையான மருந்துகளைச் சேமித்து வைத்திருக்கும் குளிர் பதன கிடங்குகளை குளிர் காற்றோட்ட வசதியுடன் பாதுகாப்புடன் வைத்திருக்க உறுதி செய்ய வேண்டும்.,மேலும் சுகாதார நிலையங்களில் தினமும் காலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டும் . 

இதன் மூலம் அதிகப்படியான கோடை வெயிலின் தாக்கத்தால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகரும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்

Related post