பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!

பொங்கல்  பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு! பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி ,சேலை வழங்கு திட்டத்திற்கு  ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக  தமிழ்நாடு அரசாணை இன்று வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1983 ஆண்டிலிருந்து பொங்கல் திருநாளில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி,சேலை  வழங்கபட்டு வருகிறது. எனவே இந்த வருடம் (2024 ஜனவரி 14) பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 சேலைகள், 1,63,00,000 வேட்டிகள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய  தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது.

இதற்காக ரூ200 கோடி நிதி ஒதுக்கீட்டினைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சேலை வேட்டிகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.  இத்திட்டமானது நியாயவிலை கடைகளில்  பயனாளிகளின் கை விரல் ரேகை கொண்டு கட்டாயம் பதிவு செய்யப்பட்டு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் கூவம் நதியைச் சீரமைக்க 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கூவம் நதியைச் சீரமைக்க 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சென்னை கிண்டியில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0 நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது உதயநிதி…
அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீஸ்

அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீஸ்

அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இயக்குனர் சுந்தர். சி அவர்களின் அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல .…
இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்.  உலக நாயகன்  கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைக்கா…