பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்!

பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்!

இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் பரபரப்பான சூழலில் பல விவாதங்களுடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் (9 .10 .2023) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம். எல். ஏ இராசேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது .இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும் இன்றைய தினம் (10.10.2023) செவ்வாய்க்கிழமை இன்று சம்பளம் வழங்குதல் திருத்த சட்ட மசோதா முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.சீட்டு நிதி தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா, தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா என 7 மசோதாக்கள் உள்பட தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று எதிர்க்கட்சி சார்பாக பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிவோர் விபத்து கருத்தில் கொண்டு விவாதங்கள் ஏற்படுத்தப்பட்டது.

பல்வேறு மானிய கோரிக்கைகள் பற்றியும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் தலைவர் மு.அப்பாவு 11.10.27 நாளைய தினம் புதன்கிழமையும் சட்டப்பேரவை கூட்டுத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Related post