பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் – போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு!

பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் – போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு!

பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி. ஊத்துக்கோட்டை  வட்டம் பெரியபாளையத்தில் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதை பொருள் ஒழிப்பு  பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.ஐ ஆறுமுகம், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள்  வெங்கடேசன், ரவி, வேலு மற்றும் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சம்பத் போன்றவர் இந்தப் போதை பொருள் ஒழிப்பு பற்றிய  விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி நடத்தினர். போதை பொருள் ஒழிப்பு பேரணிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி அனுமதி தந்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணி பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலிருந்து துவங்கப்பட்டு வடமதுரை கூட்டுச் சாலையாக நடத்தப்பட்டு மீண்டும் பஜார் வழியாக மாணவர்கள் பெரியபாளையம் அரசு பள்ளிக்கு வந்தடைந்தனர். இந்தப் பேரணியில் ‘புகை பிடிப்பது உயிருக்குக் கேடு’ “கல்வியால் நிமிர்ந்து நில்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி மாணவர்கள் அனைவரும்  கோஷமிட்டனர். மேலும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

Related post