பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 108 பெண்கள் விளக்கு பூஜை திருவிழா உற்சவம் !

பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 108 பெண்கள் விளக்கு பூஜை திருவிழா  உற்சவம் !

பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 108 பெண்கள் விளக்கு பூஜை திருவிழா உற்சவம்! திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் ஆனி மாதம் குரு பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் திருவிளக்கு பூஜை   விழா (ஜூலை 3 ) வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமான வந்திருந்தனர். இத்திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்தும் காணிக்கையாக மொட்டை அடித்தும்  பெரியபாளையத்தம்மனை ஏராளமான பக்தர்கள்  வழிபட்டனர். மேலும் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன.

  இதை தொடர்ந்து நேற்று மாலை (ஜூன் 3) ஆனி மாதம் குரு பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் விளக்குகள் பூஜை விழாவில் கலந்து கொண்டனர். இக்கோயிலில் அம்மன் உற்சவம் வெள்ளி அலங்காரத்தில் கோயிலின் மூன்று முறை சுற்றி தேர் பவனி வந்தார். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இத்திருக்கோயிலில்  அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் கொண்டு சிறப்பான முறையில் விளக்கு பூஜை  நடத்தப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related post