புதுடெல்லியில் ஆகஸ்ட்11 – காவிரி மேலாண்மை கூட்டம்!

புதுடெல்லியில் ஆகஸ்ட்11 – காவிரி மேலாண்மை கூட்டம்!

புதுடெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் ஆகஸ்ட்11 .புதுடெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது என்று  காவிரி வேளாண்மை ஆணைய கூட்டத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தார்   தெரிவித்துள்ளார்.  இந்தக் கூட்டத்தில் கர்நாடகா ,தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா ஆகிய மாவட்டங்களில்  காவிரி நதி நீர் பங்கீடு குறித்து  ஆலோசனை  நடத்த உள்ளது. மேலும் டெல்டா பாசனத்திற்காக ஜூலை மாதத்தில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு முறையான தண்ணீர் வழங்கப்படவில்லை  என்பதால் காவிரி நதி நீர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதைக் குறித்தும் விவாதிக்க   உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா  நான்கு மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்களுக்கு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு காவேரி மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related post

புதுடெல்லியில் இன்று நிலநடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!

புதுடெல்லியில் இன்று நிலநடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் என் சி ஆர் பகுதியில பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. டெல்லி…