புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகேயுள்ள ஜே ஜே நகர் பின்புறம் உள்ள கண்மாயில் மீன் பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் இந்தக் கிராமத்தில் மழை வேண்டியும் ,விவசாயம் செழிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மீன்பிடி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் ஜே ஜே நகர் பகுதியில் நேற்றைய தினம் மீன்பிடி திருவிழா போட்டியில் அதன் சுற்று வட்டார பகுதியில் மற்ற ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் கண்மாயில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களைப் பிடித்து அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.

Related post