புதிய நாடாளுமன்றம் திறப்பு ! ரூபாய் 75 நாணயம் வெளியீடு !

புதிய நாடாளுமன்றம் திறப்பு ! ரூபாய் 75 நாணயம் வெளியீடு !

சென்ட்ரல் விஸ்டா புதிய நாடாளுமன்றம் திறப்பினை ஒட்டி ரூபாய் 75 நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 1927 இல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய நாடாளுமன்றத்துக்கு எதிராக தற்போது ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.  சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்றம் ரூபாய் 970 கோடி செலவில்  நான்கு மாடிக் கொண்ட முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 300 பேரும் அமரும் வகையில் இடம்  வசதியாக கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற (மே 28) ஆம் தேதி திறந்து வைப்பதை கொண்டாடும் வகையில் ரூபாய் 75 நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்தப் புதிய நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும் மறுபுறம் ‘சத்திய மேவ ஜெயதே’ என்ற வார்த்தையும் இடம்பெறவுள்ளது. சுமார் 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டு வட்ட வடிவில் 200 பற்கள் அடங்கிய வடிவத்துடன் இடம்பெற உள்ளது. இதில் 50% சில்வர், 40 % செம்பு, 5% நீக்கல் மற்றும் 5 % ஜிங்க் ஆகியவை கொண்ட 35 கிராம் எடையுடன் கூடிய 75 ரூபாய் நாணயத்தைப் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய அரசு வெளியிட உள்ளது.

Related post

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…
புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

 புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் சினிமாவில் அறிமுகம்!எல்வின் புல்லட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புல்லட் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.…