பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் குடும்பத்தில் திருமண ஃப்ரீ வெட்டிக் விழா முக்கிய பிரபலங்கள் வருகை

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் குடும்பத்தில் திருமண ஃப்ரீ வெட்டிக் விழா முக்கிய பிரபலங்கள் வருகை

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் இளைய மகனான (ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் )திருமண விழா ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் திருமணத்தைக் கொண்டாடும் வகையில் ஃப்ரீ வெட்டிங் விழா குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நேற்றைய தினம் மார்ச் 1ஆம் தேதி மாலை முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த விழாவிற்காக 1000 ஏக்கர் பரப்பளவில், புனரமைக்கப்பட்ட சாலைகளுடன், வண்ண விளக்குகள், வரைந்த ஓவியங்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் 2500 உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. முகேஷ் அம்பானி குடும்பத்தின் ப்ரீ வெட்டிங் விழாவில் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

ப்ரீ வெட்டிக் விழாவைக் கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் மாலையில் இருந்தே கிரிக்கெட் சாம்பியன் சச்சின் அவரது குடும்பத்தினர், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க், தோனி மற்றும் குடும்பத்தினர், ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினர் ,ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப், மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மேலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரபலங்களும் விழாக்களில் பங்கேற்கின்றனர்.

Related post

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !   பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ்…