பிரதான் மந்திரி யோஜனா திட்டம் இன்று முதல் தொடக்கம்! இந்தியாவில் விவசாயத்திற்கான பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தினை மத்திய அரசு இன்று தொடங்கி வைக்கிறது. விவசாயிகளின் கடன் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு இன்று தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் முன்னிலையில் இன்று (19.9.2023)தொடங்கி வைக்கிறார்கள். இயற்கை சீற்றங்களான மழை,புயல், வெள்ளம் போன்றவற்றால் விவசாயத் தொழிலில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தப் பேரழிவிலிருந்து விவசாயிகள் மீண்டும் தனது தொழிலை உறுதி செய்து வளர்த்துக் கொள்வதற்காக இது போன்ற திட்டங்களை மத்திய அரசானது மேற்கொண்டு வருகிறது.
கிசான்ரின் இணையதளம் (கே ஆர் பி) , இல்லம் தோறும் கே சி சி இயக்கம், விண்ட்ல் Winds கையேடு வெளியீடு போன்ற மூன்று திட்டங்களையும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அனைத்து விவசாயிகளின் நிதி சேவை அதிகரிப்பது, தரவு பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக பல முன்னேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது.