பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் . இதற்காக சென்னையில் இன்று மாலை 6 மணியளவில் ரோடு ஷா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இந் நிகழ்ச்சிகளில் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை , கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர்களும் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை டி நகர் ,பனகல் பார்க் பகுதிகளில் வாகன பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் . எனவே வாகனப் பேரணி நடைபெற உள்ளதால் சென்னை டி நகர் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 13ஆம் தேதி பெரம்பலூரிலும், 14ஆம் தேதி விருதுநகரிலும், 15ஆம் தேதி திருநெல்வேலி பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
