பிக் பாஸ் சீசன் 7 மிக விரைவில் !

பிக் பாஸ் சீசன் 7 மிக விரைவில் !

பிக் பாஸ் சீசன் 7  மிக விரைவாக  (அக்டோபர் 8 தேதி) விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 தொடங்கப்பட்டு சீசன் 6 வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.   இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 மிகப்பிரம்மாண்டமாக   தொடங்கப்பட உள்ளது.இதற்காக விஜய் டிவி போட்டியாளர்களை சிறப்பான முறையில் வலை வீசி  தேர்வு செய்துள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வழக்கம் போல கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை சீசன் 7-இல் இரண்டு வீடு செட்டுகள் போட்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக முன்னோட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாடலிங் மற்றும் வெள்ளி திரை நட்சத்திரங்களான தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, நடிகர் அப்பாஸ் ,தொகுப்பாளர் ரக்சன்,  தொகுப்பாளனி ஜேக்சினி, ஸ்ரீதர் மாஸ்டர்,  பிரதாப் சந்தோஷ், நடிகை ரக்க்ஷிதாவின் கணவர் தினேஷ் போன்ற  பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (பிக் பாஸ் சீசன் 7) ப்ரோமோ வீடியோ  வெளியிடப்பட்டதில் பிக் பாஸ் ரசிகர்கள் பெருமளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related post

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி…