பள்ளி மாணவர்களுக்கான ‘நலம் நாடி செயலி’ அறிமுகம் !

பள்ளி மாணவர்களுக்கான ‘நலம் நாடி செயலி’ அறிமுகம் !

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ‘நலம் நாடி’ செயலியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் பள்ளி மாணவர்களின் மனம் நலம் வளர்ச்சி மற்றும் உடல் நலம் குறித்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும்.இந்தச் செயலி பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

Related post