பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை!

பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை!

 ஜூன் இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந் நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் ஆலோசனையின் படி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்களை வழங்குவது குறித்து மே 31ஆம் தேதி பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கான பாடப் புத்தகம் ,நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பள்ளி திறக்கும் அன்று வழங்கப்பட வேண்டும் என்றும், மேலும் நலத்திட்டப் பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி முதன்மை அதிகாரிகளும் ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஜூலை 15ஆம் தேதி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்கள் சார்ந்த விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய…

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார்…