நிதி நுட்ப நகரம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

நிதி நுட்ப நகரம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்!

தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் (17.06.2023) அன்று சென்னை ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில்  நிதி நுட்ப நகரம் அமைப்பதற்கான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர ‘இந்த நிதி நுட்ப நகரம்116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும், “உலகப் பொருளாதாரமே டிஜிட்டல் மயமாக காணப்படுகிறது,இந்த நிலையில் நிதி நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி நிதி நுட்ப துறையில் சிறந்து விளங்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிதி நுட்ப நகரம் அமைவதால் ரூபாய்12,000 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு  ஈர்க்கப்படும். இதனால் சுமார் 80,000நபருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நிதி நுட்ப நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5. 6 கோடி சதுர அடியில் நிதி நுட்ப நகர கோபுரம்  அடுக்கு மாடி கட்டிடமாக அமைக்கப்பட உள்ளது. இதில் பணி புரியும் நபர்களுக்கு குடியிருப்புகள் வசதிகள்,உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.மேலும் சென்னை தொடர்ந்து கோவை, திருச்சி ,மதுரை என்ற மாவட்டங்களில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…