நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்! நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மலைக்கோட்டை மேற்கே நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.    இங்கு  கோபுரம் அல்லாத 1.8 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சிலை கொண்டு கோயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து- அறநிலையத்துறை கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.மாதந்தோறும் பால் அபிஷேகம் நடைபெறுவது  வழக்கம்  என்பதால் ஆடி மாதத்தின் முதல் வாரமான ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம்  ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் ,பன்னீர் ,உள்ளிட்ட வாசனைதிரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளுடன் நடைபெற்றது. இந்த சிறப்பு பாலபிஷேகத்திற்காக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏராளமான பக்தர் கூட்டம்   அலைமோதியது. எனினும் எதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த பக்தர்கள் ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ ராமஜெயம்  என போதித்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

Related post

காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அருள்மிகு விஸ்வரூப பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மூலவரான…