நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமையில் சவர்மா வாங்கி சாப்பிட்ட கலையரசி என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். மேலும் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கலையரசி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட பலரும் வாந்தி, மயக்கத்தோடு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இந்த உணவகத்தில் மாவட்ட அதிகாரிகள் பலர் ஆய்வினை மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சி வகைகளை பினாயில் ஊற்றி அழித்தார்கள். மேலும் இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் உள்பட 3 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து உணவகத்திற்கும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.