நாடு முழுவதும் காவலர்கள் வீரவணக்க நாள் கொண்டாட்டம்.

நாடு முழுவதும்  காவலர்கள் வீரவணக்க நாள் கொண்டாட்டம்.

நாடு முழுவதும் உயிரிழந்த காவலர்களின் நினைவாக காவலர் வீரவணக்க நாள் (அக்டோபர் 21 )இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் காவலர் நினைவுச் சின்னம் உள்ள இடத்தில் உயரிழந்த காவலர்களுக்கு அமிர்ஷா தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் , காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த டிஜிபி அலுவலகத்தில் கடந்த ஓராண்டுகளில் உயிரிழந்த காவலர்களுக்குத் துப்பாக்கி குண்டுகள் முழக்க மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட தலைநகரங்களான நெல்லை ,திருச்சி ,கடலூர் ,தூத்துக்குடி மாவட்டங்களிலும் உயரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன. ஆந்திர பிரதேசம், குஜராத் , மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா போன்ற மாநில தலைநகரங்களிலும் வீர மரணமடைந்த காவலர்களை நினைவு கூறும் வகையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

Related post