நவீன வசதிகள் கொண்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை தீவு திடலில் நவீன வசதிகள் கொண்ட 100 புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசு பேருந்துகள் தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1000 பேருந்துகளை வாங்கவும்,500 பேருந்துகளைப் புதுப்பிக்கும் பணியில் ரூபாய் 500 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் அரசு பேருந்துகள் புதிதாக சீரமைக்கப்பட்டு மஞ்சள் நிற வண்ணமாக மாற்றப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை, திருச்சி, கரூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களிலும் அரசு பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக 100 பேருந்துகள் (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர்,சேகர்பாபு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
