‘நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான்’ -அஞ்சாமை ட்ரெய்லர் வெளியீடு!

‘நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான்’  -அஞ்சாமை ட்ரெய்லர் வெளியீடு!

 நடிகர் விதராத் அஞ்சாமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் வாணி போஜன், ரகுமான் கிரித்திக் மோகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தில் ராகவ் பிரசாந்த் இசையமைத்துள்ளார். நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், இதனால் மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்புகளையை வைத்து ‘அஞ்சாமை’. உருவாகியுள்ளது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். 

அஞ்சாமை திரைப்படத்தை ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந் நிலையில்’நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கல்விதான்’ எனும் அஞ்சாமை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் அஞ்சாமை திரைப்படம் வெளியாகும் எனப் படக் குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் மாணவர்களுக்கான நல்ல கருத்துள்ள திரைப்படம் என்பதால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.

Related post