நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

நமக்கு  நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

  ‘நமக்கு நாமே’ திட்டம் ஊரகப் பகுதிகளில்  செயல்படுத்தப்படுகிறது. நமக்கு நாமே திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய்.100 கோடியை  விடுவித்துள்ளார் . இதற்கான அரசாணை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ‘நமக்கு நாமே’ திட்டம் தொடங்கப்பட்டது. 2023 -2024 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த 100 கோடி ரூபாயில் ஒதுக்கீட்டில் முதலில் 50 கோடி ரூபாய் கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம் மற்றும் சுற்று சுவர் கட்டுதல், போன்ற கட்டுமான பணிகளை விரைந்து  செயல்படுத்தப்படும்.

மேலும் அரசு விடுதிகள் கட்டுதல், உள் விளையாட்டரங்கள் அமைத்தல், சமுதாயக்கூடம் போன்ற கட்டுமான பணிகளையும் சிறந்த முறையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 50 கோடி ரூபாயை இந்தப் பணிகள் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில்  இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ‘நமக்கு நாமே’ திட்டத்தினை கொண்டு ஊரகப் பகுதிகளின் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக மொத்தம்  ரூபாய் 100 கோடி  ஒதுக்கீடு தமிழக அரசு  செய்துள்ளது.

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…